வேப்பலோடை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இளைஞர்களின் எழுச்சி நாயகன் டாக்டர்.A.P.J.அப்துல் கலாம் அவர்கள் பிறந்த நாள் விழா

தூத்துக்குடி மாவட்டம்  ஒட்டப்பிடாரம்  தாலுகா   வேப்பலோடை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இளைஞர்களின் எழுச்சி நாயகன் டாக்டர்.A.P.J.அப்துல் கலாம் அவர்கள் பிறந்த நாள் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சேகர்  தலைமை தாங்கினார். தி 1234 பவுண்டேஷன் பாண்டிய மண்டல துணை நிர்வாகியும்,வேப்பலோடை  அன்னை தெரசா கிராம பொதுநலச் செயலருமான  ஜேம்ஸ் அமிர்தராஜ் ஒருங்கிணைப்பாளர்கள் 
ராஜபாண்டி,  கருப்பசாமி அவர்கள் முன்னிலை வகித்தனர்.தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழக செயலர்,ஆசிரியர்கள்,மாணவ,மாணவியர்  உட்பட அனைவரும் அப்துல் கலாம் அவர்கள் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார்கள்.மணீஷா வரவேற்புரை வழங்கினார்.பட்டதாரி தமிழாசிரியை கவிதா சிறப்புரையாற்றினார்… திருமணிச்செல்வி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் அன்றைய தினம் நடந்த அறிவர் அப்துல் கலாம் அவர்களின் சிறப்புகள் பற்றி கவிதை, வினாடி வினா , பாடல், ஆகிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டது .அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகளை அனைவரும் உறுதிமொழி எடுத்தனர்.அந்த உறுதிமொழி அடங்கிய பிரசுரத்தை அனைவருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக செயலர் ஜேம்ஸ் அமிர்தராஜ் வழங்கினார்கள்.அரசு மாதிரி  மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் ராமகிருஷ்ணன், வினுஷா, ஜெரிட்டா, கவிதா ஆகியோர் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.நிறைவாக மாணவி தீபலெட்சுமி நன்றி கூறினார்.