வேப்பலோடை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பேச்சு போட்டி, கவிதை போட்டி

டாக்டர் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு வேப்பலோடை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பேச்சு போட்டி, கவிதை ஆகிய போட்டிகள் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பள்ளி தலைமையாசிரியர் சேகர் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் முனியசாமி, தி 1234 பவுண்டேஷன் பாண்டிய மண்டல துணை நிர்வாகியும், வேப்பலோடை அன்னை தெரசா கிராம பொதுநல சங்க செயலருமான ஜேம்ஸ் அமிர்தராஜ், பொருளாளர் முத்துக்கிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் ராஜபாண்டி, கருப்பசாமி, பட்டதாரி ஆசிரியர் கிரேஸ்லின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதுகலை ஆசிரியர் தேவி வரவேற்புரை ஆற்றினார். ஆசிரியர் ராமகிருஷ்ணன் டாக்டர் அப்துல்கலாம் பற்றி கவிதை வாசித்தார். முதுகலை ஆசிரியர் முத்துக்கனி அப்துல்கலாம் வாழ்வில் நடந்த சுவையான அனுபவங்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

மாணவ, மாணவிகள் அப்துல்கலாம் பற்றி பேச்சு, கவிதை, பொன்மொழிகள் ஆகிய போட்டிகளில் பங்கேற்றனர்.