From Gr Balraj

1-அன்பான ஆத்ம மேம்பாட்டாளர்களே!

நமது நிறுவனர், நம் நிறுவனத்தை (அறக்கட்டளையை) நிறுவியதுகூட நமது வருங்கால சந்ததியினருக்கு, நமது தடத்தை – அதாவது, மேன்மைகளை, ஞானத்தை, வித்தைகளை – விட்டுச் செல்வதற்காக என்பதாகத்தான். அதன் ஒரு அங்கம்தான் ஆளுமை/ தலைமைத்துவ மேம்பாடு எனக் கொள்ள முடியும். அதன் ஒரு திறன்தான் – மென்திறன் எனும் பேச்சாற்றல். இந்த ஆற்றல் மட்டுமல்ல; எல்லா திறன்களுமே கற்றல் – கற்பித்தல் என்ற இருபுறங்களை,   அகம் – புறம் என்ற இருபக்கங்களை, உள்ளே – வெளியே என்ற இரு அம்சங்களைக் கோருகிறது. இதன் முதற்படியான உள்ளிடுதல் (Inputting) என்பதற்கான முன்னுதாரணமாகத் தானே திகழ வேண்டும் என்று தானே முன்வருகிறார்/ முன்நிற்கிறார். நம்முன் உள்ளவற்றுள், சாதாரணமான (Casual/ Ordinary), வழமையான (Customary), சீர்மிகு (Smart) என்பதான அம்சங்கள் உள்ளன. எனவே, எந்த பொருளும், எந்த செயலும், எந்த நிகழ்வும் மேற்கண்ட மூன்று அலகுகளில்/ தரத்தில் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டும் மாறிக்கொண்டுதான் இருக்கின்றன. நம் போன்றவர்கள்தான், நம் முன்னுள்ள, நிகற்கின்ற அனைத்தையும் உயர்நிலையான தரமுள்ளதாக, சீர்மிக்கதாக ஆக்க முயல்கின்றோம். அதற்கான திறன்மிக்க தலைமைத்துவம் நமக்கே அவசியமாகிறது. அதற்கான உயர்திறன் பயிற்சியும் அத்தியாவசியமானது. இதுதான் தலைமையின், அமைப்பின் கூர்நோக்கு.

ஆனால், இங்கு நடந்ததும் நடப்பதுமென்ன?

நாம் நமது வாழ்வின் இறுதிநாள் வரை கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்க, நம்மில் பலர் அனைத்தையும் கற்றுவிட்டதாகக் கருதுகிறோம். விஞ்ஞானமோ, ஒவ்வொன்றும் இணைந்து இயங்கி, வளர்சிதை மாற்றத்தாலேயே வளர்ச்சி அடைகிறது என்கிறது. அதனாலேயே நமது அமைப்பும் ஆளுமை வளருமே ஆன்ம பலத்தால்; அகிலம் உய்யுமே அத்திறத்தால் என்கிறது. இந்த மாற்றத்தையும் மேம்பாட்டையும் செய்யவே திறன் பயிற்சிகள்!

நம் ஒவ்வொருவருக்கும் நம் திறமைக்கேற்ப கிடைக்கும் வெவ்வேறு மேடைபோலன்றி, 1234 அறக்கட்டளை என்பது உயர்வான, தனித்துவமான அரங்கு என்பதை அனைவரும் அறிந்தால், தனித்திறன் மேம்பாடான, EEPS அர்த்தமுள்ளதாகும்!

 

2-நாம் ஓராண்டு பயணத்தை நிறைவு செய்துவிட்டோம்! எப்படி? ஒரு கர்த்தா (Creator – Founder) , அவரால் உருவாக்கப்பட்ட அறங்காவலர் குழு ( Board of Trustees), 40 பாராளுமன்றத் தொகுதி நாயககர்கள் (Senators), இவர்களையும் உள்ளடக்கிய 240 தொகுதி மேதகைகள் (Statesmen) – இதுதான் நமது பூர்வாங்க அமைப்பு – இதைக்கொண்ட பயணம்தான்..

நமது நோக்கும், இலக்கும் என்னவாக இருந்தது? ஆத்மாவிற்குள் ஒரு மாற்றம் – அதன் மூலமான தமிழகத்தின் ஏற்றம். ஆத்ம மாற்றத்திற்கும் ஓர் அறிவியல்பூர்வமான படிநிலை அணுகுமுறை – எதார்த்தத்திலிருந்து சீரான மாற்றம் – மதி, சித்தம், புத்தி என்று. ஆம், இந்த சீராக்கம் – Mind-set-> Heart-set-> Soul-set என்று. அதற்கோர் செயலாக்க அணுகுமுறைக்காக நேரிய கொள்கை (Ideal), வழிகாட்டும் கோட்பாடு (Doctrine)  எனும் 5 நிலையான கோட்பாடுகள் (5 Point Charter – Dimensions), அவற்றினை ஒட்டிய சீரிய செயல்பாடுகள். இப்படித்தான் சென்ற ஓராண்டைக் கடந்தோம்.

ஒற்றைத் தலைமை, அவரால் வழி நடத்தப்பட்ட தலைமைக்குழு, அவராலேயே இயக்கப்பட்ட செயலாக்கத்தில் இருந்த தொகுதி மேதகைகளென ( இவர்கள் கிட்டத்தட்ட பாதிக்கு சற்று அதிகமாகவே நியமிக்கப்பட்டு அதில் 3ல் 1பகுதியினரே ஆண்டின் இறுதித் திட்டமான 50 நாட்கள் – 100 திட்டங்களில் பங்கேற்றதுடன் 2ல் 1பகுதியினரே பொதுக்குழுவில் பங்கேற்றனர். 240 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் ஒரேயொரு நகரத்தில் ஒரேயொரு வேர்கால் மட்ட (Grassroot)அமைப்பான ஆத்ம மையத்தை (Genomic Centre) தான் நிறுவியுள்ளோம். இது நாம் நமது அமைப்பைப் பற்றிய பூர்வாங்கம். இது நமது பன்முகப்பட்ட நோக்கத்திற்கும் இலக்கிற்கும் தேவையான பல்வேறு பகுதிகளையும் இணைவையும் கொண்ட சிக்கலான பொறியமைவு  கொண்ட மாபெரும் தொடருற்பத்தி ஆலை (Processing Industry/ Factory) போன்ற உருக்கு தன்மை (Stable and Concrete) பெற்ற அமைப்பாக்கம் (Organisation) அல்ல. இது ஒரு நெகிழ்வான நெம்புகோல்  (Simple Machine) தன்மைகொண்ட எளிய பொறியமைவு (Mechanism) தான். ஆனாலும், நாம் ஆல்போல் தழைத்து அருகு போல் வேரூன்றி மாபெரும் இயக்கமாவோம் என்ற நம்பிக்கையும் முகாந்திரமும் எங்கிருந்து பிறக்கின்றது?

நிச்சயமாக, இதற்கோர் ஆழமான முகாந்திரமும் காரணமும் நிச்சயமாக இருக்கிறது ! அதுதான் என்ன?….

 

3-மிகச் சிறந்த சிந்தனையும் வழிகாட்டலுமாகும்.

ஒரு அமைப்பு இயக்கமாக வளர்வதென்பது ஒரு இயல்பான வளர்ச்சியல்ல; அது,   விஞ்ஞானபூர்வமான திட்டமிடலாலும் தொழிற்நுட்பம் சார்ந்த செயலாக்கத்தாலுமே சாத்தியம் – இங்கு தற்செயல் நிகழ்வுகள் சாத்தியமில்லை என்பதே தெள்ளத்தெளிவு.

அமைப்பாக்கத்தில் (Structured Organisation) சிறந்த செயல் திட்டங்களை  (Plan of Action)  வகுப்பதென்பது அகரீதியான சிந்தனை/கருத்தியல் (Concept) விளைவு. அதை நடைமுறையில் செயலாக்குதல் என்பது புறரீதியான பொதீக/பொருளியல் (Material) விளைவு.

இந்த பொருளாயத (Materialistic) விளைவிற்கு முறையான தகவல் தொடர்பு முறைய (Proper Communication)  முறையே இணைந்த பொறியமைவுமே (Properly Assembled  Mechanism) அடிப்படையாகிறது.

இப்படியே ஆன அமைப்பாக்கமே இயக்கமாகிறது.

இதற்கான ஆரம்ப அடையாளமும் உதாரணமுமாகவே நமது அமைப்பு (The 1234 Foundation) இருக்கிறது. அதனாலேயே அது இயக்கமாகப் பரிணமிக்கும் என்ற நம்பிக்கையை நடைமுறைச் செயல்களிலிருந்து நமக்கு அளிக்கிறது. அப்படியென்ன அமைப்பாக்கம் அது? அப்படியானால் நாம் சரியாகத்தானே உள்ளோம்! இன்னும் என்ன செய்யவேண்டி இருக்கிறது…… அந்த…..அமைப்பாக்கத்தில்? ஆம்! இன்னும் நிறையவே இருக்கிறது. அப்படியானால், நாம் கடந்துவந்த தூரம்?!……….?!

 

4-ஒரு அமைப்பினதோ அல்லது இயக்கத்தினதோ தேவையை, வரலாற்றுத் தேவை (Historical Need) அல்லது சமுதாயத்தின் தேவை (Social Need) என்பார்கள். இப்படித்தான் பல்வேறு இயக்கங்களும் அமைப்புகளும் தோன்றி, சமுதாயத்தில் பல்வேறு மாற்றங்களை, சீர்திருத்தங்களை, மறுமலர்ச்சியை, சமூகநீதியை, புரட்சியை சாதித்துள்ளன. தனிமனித சிந்தனையில் தோன்றி, குழுவாக பிறப்பெடுத்து நாளடைவில் பிரளயமாக, சகாப்தமாக நிலைபெற்றன. அதே நேரத்தில் பிறந்த அத்தனை பொதுநல அமைப்புகளும் இயக்கங்களும் சாகாவரம் பெற்றவை அல்ல. மனித வாழ்வைப் போலவே, சில கருவிலேயும், சில குறை பிரசவத்திலேயும், சில சிசு பருவத்திலேயும், குழந்தைப் பிராயத்திலேயும் மரித்து, மரணித்தும் பிறக்காமலேயும் சுவடற்றும் போயுள்ளன. இவற்றிற்கு சம காலத்திலேயே ஏராளமான உதாரங்கள் உண்டு. இதில் நாம் வரலாற்று வகைப்பபட்ட முதல் ரகம் என்பதில் பெருமிதம் கொள்ளலாம்!

இதற்கான முழுமுதற் காரணம், நமது தலைமை (Leadership). அதுவும் ஆளுமைமிக்க தலைமை. தலைமை நிகரற்றதாக இருப்பதை அளப்பதற்கான அளவுகோலை அத்தலைமையே படைத்தளித்ததே மிகப் பெருங்கொடை. ஆளுமையின் வளர்ச்சி உயரம் “ஆன்மபலத்தால் ஆனது என்பதே நிகரற்ற உண்மை”யே அந்த அளவீடு. ஆன்ம பலத்தின் உயரமே; ஆளுமையின் உயரம்!

தலைமைப் பண்பின் (Leadership Quality) சமூக அளவீடுகளாக பின்வருபவை சொல்லப்படுகின்றன. அவை:

1)                    ஈர்த்தல் (Inspiring);

2)                    ஊக்கமூட்டல் (Encouraging);

3)                    இலக்குகளை நிர்ணயித்தல் (Goal Setting);

4)                    நிறைவேற்றுவதற்கான ஒத்துழைப்பு (Assisting for Accomplishment);

5)                    வெற்றியைக் கொண்டாடுவது (Celebrating the Success);

6)                    மறுபரிசீலனை அல்லது தேடுதல் (Review or Tracking).

இந்தத் தலைமைப் பண்புகளைக் கொண்ட தலைவரைத்தான் நாம் பெற்றுள்ளோம். அவரால் ஆன நிர்வாகக் குழு. அதைக் கொண்டுதான் தமிழகத்தின் ஏற்றத்தையும் மாற்றத்தையும் சாதிக்க தனது 40 ஆண்டுகால சமூகப்பணி முதிர்ச்சியையும் அனுபவத்தையும் கொண்டு புறப்பட்டது, அந்த சிங்கம்.

அடுத்தது, தொலை நோக்கு (Vision and Visionary). ஆம்,  சுயநலம் ஒன்று மட்டுமே கிட்டப்பார்வையும் குறுகிய நோக்கும் கொண்டதாகும். பொதுநலம் என்பது அதற்கு நேர்மாறானது. தொலைநோக்கும் விசாலபார்வையும் கொண்டது. இந்தப் பார்வையைப் பெருவதற்கு, அறிவார்ந்த (Intellectually Evident) சான்றான்மையோடு (Wisdom)கூடவே சமூக ஞானத் திறமை (A collection of skills and abilities that can be applied to a professional or creative endeavor), நேரிய அணுகுமுறை (Superlative Attitude) எல்லாம் செரிந்த வல்லமை கொண்ட செலுத்தலைப் (Drive) பெற்றுள்ளோம்!

 

இவையெல்லாம் நிச்சயமான தொடக்கப் புள்ளிகள்தான்……..ஆயினும், இன்னும் ஏதோ ஒன்று நம்மிடம் சிறந்ததாக யாரும் தொட்டுப்பாராத யோசிக்கவே தயங்குகின்ற ஒன்று நம்மிடம் உண்டு……..அது

 

5-இயக்கத்தின் மேற்சொன்ன இயக்க ஆற்றலுக்கான (Dynamism) Knowledge, Skill, Attitude என்பவைதான் ‘எங்கிருந்து தொடங்குவது? (Where to start from?)’ ‘எப்படித் தொடங்குவது?’ (How to start?)’ ‘என்ன செய்யவேண்டும்? (What to do?)’ என்ற நமது தொடக்க கேள்விகளுக்கும் வளர்ச்சிக்கான அடிப்படைக் கேள்விகளான: ஏன்? (Why?) எதற்கு? (For What?) எப்படி? (How?) எங்கு? (Where?) எப்போது? (When?) யாருடன்? (With Whom?) என்பவற்றிற்கெல்லாம் பதிலளித்து நம்மை/ நம் அமைப்பை வளர்ச்சி நோக்கி முன்னிழுத்துச் செல்கின்றன.

 

மூன்றாவதாக, சிறந்த தலைமைக்கோர் அழகு பயிற்றுவிக்கப்பட்ட, அறிவார்ந்த பற்றாளர்களைத் தம்மோடு அழைத்துச் செல்வதோடு கூடவே தகைசார்ந்த, தகுதியுடையோரை, தலைமைப் பொறுப்பின் (Leeadership Responsibility) 2-ஆம், 3-ஆம் கட்டங்களின் வரிசையிலும், துறைசார்ந்த அணிகளின் ( Portfolio Bandwagon) தலைமையிலும், ஒரு பல்பரிமாணம் கொண்ட நிர்வாகப் பொறியமைவின் (A Multi-dimensional Administrative Mechanism) திறன்மிகு பற்சங்கரங்களாகவும் (Master Gears – Sun Gear and Star Pinions), முன்னோக்கி மட்டுமே அனுமதிக்கக்கூடிய பற்சக்கரத் தடைச் சாதனமாகவும் ( Ratchet Device) உதாரணமாக, செயற்குழு (Working Committee), வழிகாட்டும்குழு (Steering Committee), கட்டுப்பாடு, ஒழுங்கு நடவடிக்கை மற்றும் கணக்கீட்டுக்குழு (Control, Audit & Disciplinary Action Committee), வளர்ச்சிக்கேற்ப  இன்னபிறவாகவும் மனித ஆற்றல் விரிவாக்கமும் நிலைநிறுத்தப்பெறுதலையும் உறுதி செய்வதாகும். அப்படிப் பட்டதான தலைமையையும் தகைசால்பையும் பெற்று அதன் கண்கூடான விஞ்ஞானபூர்வ அமைப்பு விரிவாக்கத்தையும் சாதித்து வருகிறோம். ஓ….அதுதானா……..அந்த சூட்சமம்??………இல்லை…….இல்லை!

6- ஆத்மாவிற்குள் மாற்றம் எவ்வாறு பயணிக்கிறது?

‘நான் – எனது’ (I -Mine) என்பதில் ஆரம்பித்து, ‘நாம் – நமது’ (We – Ours) வழியாக, ‘யாவரும் – யாவருக்கும்’ (Us – For Us) என்பதாகத்தான். இதைத்தான் ஆரம்பத்தில் சொன்னோம்: சித்தத்தில் தொடங்கி, புத்தி வழியாக, மதியாகிறது (Mindset -> Heartset -> Soulset) என்று. பெற்றதனைத்தையும் இந்த பூமியிலேயே விட்டுவிடுத்தான் செல்லப்போகிறேம் என்பதை அறியும்போதும் அவை நமக்குப் பின்னால் என்னவாகும் என்று அறியாதபோதும் ‘நான் – எனது’ என்பதிலிருத்து மாறி ‘நாம் – நமது’ என்பதற்குப் பயணிக்கிறோம். இறுதிப் பயணத்தில் எந்தப் பொருளும் நம்மோடு வர இயலாது என்று ‘சித்தம்’ (பகுத்தறிவு) (Intellect/ Rational Thinking) சொன்னபின் நம்மோடு ‘அருள்/கீர்த்தி’ (Grace/ Reputation) என்கிற பெயரையும் புகழையும் (Name and Fame) நமக்குப்பின்னால் நீடித்ததாக இந்தப் பூவுலகில் விட்டுச் செல்லலாம் என்று ‘புத்தி’ (அது பொது புத்திதான்) (Common Sense) சொன்னபின் ‘நாம் – நமது’ என்பதிலிருந்து ‘யாவரும் – யாவருக்கும்’ என்பதை எதிர்நோக்குகிறோம். அது அவ்வளவு சுலபமானதா, என்ன? நிச்சயமாக இல்லைதான். ஏனென்றால், இங்கு பணம், பொருள், மதிப்புமிக்க நமது நேரம், சுற்றம் – நட்பு என்னும் உடல் – பொருள் – ஆவி (Sacrifice) எல்லாவற்றையும் செலவிடவேண்டியுள்ளதே! எல்லாம் எதற்காக? ஆமாம், எல்லாம் அந்த (பாழாய் போன) ‘ஆத்ம திருப்தி’ (Self satisfsction)க்காகத்தான். இதையெல்லாம் செலவிட மனப் பக்குவம் வேண்டுமே!? ஆம், அதைத் தருவதுதான் ‘மதி – நுட்பம். பொது புத்தி போலவே இதுவும் கற்பதாலும் கற்றுக்கொடுக்கப் படுவதாலுமே கைவரப் பெறுகிறோம். மாறாக, நாமென்றும் நமதென்றும் சிந்தித்தவுடனே சொந்த புத்தியுடன் மட்டுமே பொதுநலம் எனும் தளம் நோக்கிச் செல்பவர்கள் ‘கண் – மண்’ தெரியாமல் ‘களமாடும்’போது, முட்டி, மோதி, மூச்சுத்திணரல் கூட ஏற்படலாம். அதன் தெளிதலாக, ‘எல்லாம் – எல்லாருக்கும்’ என தன்னகங்கார, தலைக்கன (Inverted Pride/ Arrogance) வழி பிறக்கக் கூடும். இதுவும் மூன்றாம் நிலைதான் என்றாலும் அதன் தலைகீழ் வடிவமாகிறது (Inverted form). எவ்வாறெனில், ‘யாவரும் – யாவருக்காகவும்’ என்றல்லாமல் ‘எல்லாம் – எல்லாருக்காகவும்’ (Everything – For Everyone) என்று முதிர்ச்சியற்றதாகிறது. ‘முறையான’ (Principled) வழிகாட்டலும் ‘சீரான’ (Structured/ Cultured) நடையும் என்று வரும்போது இந்த ‘முட்டல் – மோதல்கள்’ (Conflict and Collisions) தவிர்க்கப்படுவதோடு, “யாவரும் – யாவருக்காக”வும் என்பது ‘தனிமனித சாகசமாகவன்றி’ (Adventuristic) மதி நுட்பத்தோடு (Wisdom),  ‘ஊர் கூடி தேர் இழுத்தல்’ என்பதாகிறது. இங்குதான், “அமைப்பாக்கமும் கூட்டுச்  செயலுத்தியும் (Organisation and Joint Action)” முன் வருகின்றன.

நாம் சொன்ன படிநிலை  மாற்றங்கள் (Gradual Changes) ஒவ்வொன்றிலிருந்தும் மற்றொன்றிற்கு மாறிச்செல்லும் நிகழ்முறையானது முந்தைய குணாம்சங்களை (Characteristics) முற்றிலும் துடைத்துவிடுவதில்லை. அதன் படிமங்களை (Residue) விட்டுவிட்டுத்தான் செல்லும். இதைப் புரிந்துகொள்ள நம்முடைய மனிதப் பருவ மாற்றங்களையும் வளர்ச்சியையும் எடுத்துக்கொண்டாலே போதும். நாம் பெயவராக வளர்ந்த பின்பும் ஒவ்வொருவரிடமும் குழந்தைத்தனமும் பாலிய குறும்புகளும் சேட்டைகளும் இருக்கக் காணலாம். இது போலத்தான் முட்டி மோதி மூன்றாம் நிலையான ஆத்ம மாற்றம் எனும் நிலைக்கு அரை குறையாக வரும் தருணத்தில்கூட முறையான மதிநுட்பத்தாலான (Soulful Technique) வழிகாட்டுதலும் (Guidance) போதனையும் (Teaching) கிடைத்தாலும் தன்னகங்காரமும் தலைக்கனமும் மீண்டும்மீண்டும் தடைக் கல்லாக எழவே செய்யும். மேலும், நான் – எனது என்பதும்கூட படிமமாகக் காணக் கிடைக்கும். இதையெல்லாம் முறையான பயிற்சி மூலமும் முழுமையான தன்/பிறர் முயற்சி மூலமுமே மாற்றத்திற்கு ஆட்படுத்த முடியும். இவ்வாறாகத்தான், ஆத்ம மாற்றம் வளர்ச்சி பெறும்!

7=ஆக, கடந்த 6 பதிவுகளிலும் நாம் கண்ணுற்றது போல், ஒன்று, நமது செயல்கள், அமைப்பாக இருந்து, இயக்கமாவதானாலும் சரி அல்லது எந்த வடிவத்திலான வளர்ச்சி (Whether it is Vertical Growth or Horizontal Growth)யானாலும் சரி, ஆல்போல் தழைத்து அருகுபோல் வேறூன்றுவதானாலும் சரி, ஆத்மாவிற்குள் சீரான மாற்றமென்றாலும் சரி, ஆத்ம மாற்ற அளவே சமூக ஏற்றமெனும் வளர்ச்சியின் உயரம் என்றாலும் சரி ‘எல்லா நதிகளும் கடலை சேர்வதைப் போலவோ, எல்லா நாளும்/பொழுதும்/பகலும் இரவைச் சேர்வது போலவோ, எல்லா வண்டும் மலரைத் தேடிச் சேர்வது போலவோ எல்லாமே (All the roads lead to Rome) – நமது வழிமுறைகள் அனைத்துமே – அமைப்பாக்கத்தையே (Organizational Work) சென்றடைகின்றன. அல்லது, அங்கிருந்தே தொடங்குகின்றன. ஆனால், வேடிக்கையாகவோ, விநோதமாகவோ, உண்மையாகவோ நமது படிப்பும், அனுபவமும், பழக்க வழக்கமும், இருப்பதை அப்படியே பயன்படுத்துவதும் நமது தேவைக்கும் வசதிக்கும் ஏற்ப அவ்வப்போது இருக்கும் ஒழுங்கமைப்பிற்குள் சிற்சில மாற்றங்களை மட்டுமே செய்து, வாழ்க்கையை ஓட்டி/ ஓடிக் கழிப்பதாகவே இருக்கிறது. நமது படிப்புகள் அனைத்தும் அது கலை, அறிவியல், விஞ்ஞானம், பொறியியல், தொழிற்நுட்பம், நிர்வாகம் எதுவாயினும் எங்கும் பயன்பாட்டை (Usage) – பயன்படுத்தலை (Utilization)ப் பற்றிய படிப்பாகவே உள்ளன. ஆக்கம் (Creation) – உருவாக்கம் (Creativity) பற்றி எங்கும் சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை. எனவேதான், நமது இந்தியச் சமூக வளர்ச்சியும் அதன் வேகமும் நமது மக்கள் தொகையின் வளர்ச்சிக்கு ஈடாக அமையவில்லை. எனவே, நமது சமூகத்தின் பன்முகப்பட்ட தேவைகளையும் வளர்ச்சியையும் உந்தித்தள்ள, ஈடுகட்ட நமது அமைப்புபோன்ற எண்ணற்ற அமைப்புகளின் தோற்றமும் ஆக்கமும் இன்றியமையாததாகின்றன. இதுதான், முன்பு நாம் சொன்ன வரலாற்றுத் தேவையும் கடமையும். இந்த அடிப்படையில் நாம் ஆரம்பப் புள்ளியிலேயே இருந்தாலும் நமக்கான கடமைகள் ஏராளமாக நம் எதிரே இருந்தாலும் நமது அமைப்பு விருட்சமாக வியாபித்து அவற்றை நிறைவேற்றும்  வல்லமையை,  தன்னாற்றறல் கொண்ட இயக்கமாவோம் என்ற தீர்மானத்திற்கான முகாந்தரம் ஆதாரம் என்ன? என்பதும் அதற்கான மூலக்கூறை நாம் பெற்றிருக்கிறோம் என்பதுமே கேள்வியும் அதற்கான பதிலுமாகமாக ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் முன்வைக்கப்பட்டது. ஆனால், கேள்விக்கான ஆழமான சரியான பதிலை சூட்சமமாக, தமிழக வரலாற்றின் அமைப்பு வடிவங்களில் எந்த பழைய, புதிய இயக்கங்களும் தொட்டுப் பரிசோசோதிக்காத வடிமைப்பை நாம் தொட்டு சோதித்துள்ளோம் என்று சொன்னோம். ஆம், அதுதான், அறங்காவலர்/ நிர்வாகக் குழுவும் (Board of Trustees) அதன் வழிகாட்டுதலில் அமைந்த 40 தொகுதி நாயகர்கள் (Senators) இவர்களையும் உள்ளடக்கிய 234 தொகுதி மேதகைகள் (Statesmen) (இதில் எப்பொழுதும் நிறைவாய் இருக்கும் புதுச்சேரியின் 6 தொகுதிகள் எப்போதும் இணைக்கக் கூடியவையே). இவ்வாறாக, அமைப்பு வடிவத்தையே பெயராகத் தாங்கிய 1234 அறக்கட்டளை எனும் வரலாற்றுப் பெருமையே, இந்த வடிவமைப்பே, இன்றைய நமது எல்லா சிறப்புக்கும், நாளைய தவிர்க்க முடியாத நமது இருப்பிற்கும், ஓங்கி வளர்ந்த இயக்கம் எனும் வியப்பிற்கும் அச்சாணி. இதுதான், அந்த மகத்தான முகாந்திரம், சூட்சமம் மற்றும் மந்திரக்கோள்!

நாம் பெற்றிருப்பது, தமிழக அரசு போன்ற வடிவமைப்பையும் பொறியமைவையும்! (இதுவே இந்திய மாநில அரசுகள் ஒவ்வொன்றின் பரிமாணமும். ஆனால், எண்ணிக்கை எனும் உள்ளடக்கமோ அந்த மாநிலத்தின் பரப்பளவிற்கும் மக்கள் தொகைக்கும் ஏற்ப மாறுகிறது) இந்த அமைப்பாக்கத்தை சாத்தியமாக்கியது யார்? வடிவமைத்தது யார்?  இந்திய அரசியலமைப்பு வரலாறும் இந்திய மக்களின் வாழ்க்கைமுறையும்தானே! நம்மில் யாராவதொருவர் இதைச் சிந்தித்தோமா?! தவறேதும் இல்லைதான். இனியேனும் மனதில் இருத்துவோமா!?

8- இந்திய (தமிழக) சமூக அமைப்பு வடிவங்களும் ஆட்சிமுறையும் காலத்தால் கண்டெடுக்கப்பட்டதுஎனப் பார்த்தோம். இன்றைய நாகரீக சமுதாயத்தின் நிதி, நீதி (சட்ட), நிர்வாக, செயலாக்கத் தேவைகளை நிறைவு செய்ய ஏதுவாக இந்த வடிவமைப்பு (Structure)ஆனது சிறுசிறு மாற்றங்களோடு மட்டுமே அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற முயற்சிக்கிறது. மேலும், இந்திய அரசியலமைப்புமுறை மிகவும் பல்பரிமாணம் கொண்ட நேர்த்தியான பல்லடுக்கு பொறியமைவாகும் (A multi-dimensional, multi-storied, Complex Mechanism/System). இங்கு, சட்டமன்றம் [Legislat(ure)ive] Assembly உண்டு, பாராளுமன்றம் (Parliament) உண்டு , அரசு நிர்வாகம்/ அரசாங்கம் (Government) உண்டு, நீதித்துறை (Judiciary) உண்டு, எல்லாவற்றுக்கும் மேலாக, நிர்வாகத்துறை தலைவர் (Leaders of ஃthe Administrations)களாக  ஆளுநரும் (Governor), குடியரசுத் தலைவரும் (President) உண்டு, சட்டமன்ற – பாராளுமன்றத் தலைவர்களாக முதல்வரும் (Chief Minister), பிரதமரும் (Prime Minister) உண்டு, துறைவாரியான மந்திரிகள் (Ministry) – அமைச்சரவை  (Council of Ministers) உண்டு, சபாநாயகர்கள் (Chairmen) – துணை சபாநாயகர்கள் (Vice-Chairmen) உண்டு. இந்த அமைப்புகள்தான் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒட்டுமொத்தமாக, இந்தியா முழுவதிலுமான 130 கோடி (உலகிலேயே இரண்டாவது பெரிய) மக்கட்தொகையையும், எல்லைகளையும், எல்லா வளங்களையும், எல்லா துறைகளையும் கட்டி ஆள்கின்றன.

இவை மட்டுமல்ல, மாவட்ட ஆட்சி, மாநகர ஆட்சி, நகர ஆட்சி, வட்டார ஆட்சி, கிராம பஞ்சாயத்து ஆட்சி என பரவலாக்கப்பட்ட, வேர்களை நோக்கிய அரசாட்சி, நிர்வாக அமைப்புகளும் சேர்ந்ததே இந்தியாவின் ஆளுகையும் அமலாக்கமும் ஆகும்.

மேற்கண்ட ஒழுங்கமைப்புதானே இந்தியாவின் சுதந்திரம் – சமத்துவம் – சகோதரத்துவத்திற்கும், ஜனநாயகக் குடியரசு எனும் மக்களாட்சிக்கும், நல்வாழ்வு – வளர்சி – முன்னேற்றத்திற்கும், நல்லிணக்கத்திற்கும், ஒருங்கிணைப்பிற்கும், நாகரீகம் – பண்பாடு – கலை – இலக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கும் பொறுப்பு. இத்தகைய/இதேபோன்ற நகல் ஒழுங்கமைப்பைத்தான் நமது 1234 அறக்கட்டளை தேர்ந்தெடுத்துள்ளது. மேற்கண்ட அரசியல் அமைப்புமுறையோ, பல நூறு ஆண்டு சமூக உற்பத்தி – பரிமாற்றம் – வாழ்க்கைமுறையையும் இவற்றின் உள்ளியக்கமான பல்வேறு எழுச்சிகள், மோதல்கள், போர்கள், மாபெரும் சுதந்திர/காலனீய விடுதலை இயக்கம், ஆட்சியமைப்பு மாற்றம் எனும் வெகுஜனங்களின் பாய்ச்சல்களையும் அர்ப்பணிப்பையும் தியாகங்களையும் மேற்கொண்டே முகிழ்ந்தெழுந்துள்ளது. இப்படியான, உலகிலேயே மிகச் சிறந்த உன்னதமான அரசமைப்பு முறையைத்தான்  எந்த செய்கூலியும் சேதாரமும் இன்றி நாம் தேர்ந்தெடுத்துள்ளோம். இதுதான் இதுவரையிலான நமது ஆகச்சிறந்த தொலைநோக்கு. மேலும் செல்வோம்

.9-அமைப்பு எனும் ஒழுங்கமைப்புதான் ஓர் சமூக இயக்கத்திற்கான விதை. அது வீரியமான விதையாக இருந்து, களர் அல்லாத சத்தான நிலத்தில் (Fertile Land) ஊன்றபட்டால் அந்த “விளையும் பயிர் முளையிலேயே” தெரியத்தானே செய்யும்! ஆம், தமிழகம் எனும் தரமான விளைநிலம், வீரியமான விதை எனும் தி 1234 அறக்கட்டளையை ஆரத்தழுவி, அரவணைத்து, சுவீகரித்துக்கொண்டுள்ளது. வீரியமான 1234 அறக்கட்டளை விதையும் ஆரோக்கியமாக முளைக்கத் தொடங்கிவிட்டது. இப்போது நமது பணியெல்லாம் ஆடு-மாடுகளென்னும் அன்னியக் கருத்தியல்கள் அந்த முளைத்த இளந்தளிர்களுக்கு வேலியிட்டு, நீருற்றி, கடும் வெயில்-மழை மற்றும் பருவ மாறுபாடுகளால் கருகிடாமலும் அடித்துச்செல்லாமலும் அலைகழிக்கப்படாமலும் பாதுகாத்து வளர்ப்பதாகும். இதற்கான திசைவழியும் கொள்கை ஆக்கங்களும் செயல்திட்டங்களும் துறை ரீதியான செயல்களும் இவை அனைத்திற்குமான ஒருங்கிணைப்பும் வழிகாட்டலும்தான் நாம் மேலே சொன்ன வளர்ப்பு நடவடிக்கைகள் (NURTURING ACTIVITIES).

நம் நிறுவனத்தை (அறக்கட்டளையை) நிறுவியதுகூட நமது வருங்கால சந்ததியினருக்கு, நமது தடத்தை – அதாவது, மேன்மைகளை, ஞானத்தை, வித்தைகளை – விட்டுச் செல்வதற்காக என்பதாகத்தான். அதன் ஒரு அங்கம்தான் ஆளுமை/ தலைமைத்துவ மேம்பாடு எனக் கொள்ள முடியும். அதன் ஒரு திறன்தான் – மென்திறன் எனும் பேச்சாற்றல். இந்த ஆற்றல் மட்டுமல்ல; எல்லா திறன்களுமே கற்றல் – கற்பித்தல் என்ற இருபுறங்களை,   அகம் – புறம் என்ற இருபக்கங்களை, உள்ளே – வெளியே என்ற இரு அம்சங்களைக் கோருகிறது. வளத்தெடுத்தலின் முதற்படியான உள்ளிடுதல் (Inputting) என்பதற்கான முன்னுதாரணமாகவும் முன்னோக்குடனும் தான் திகழ வேண்டும் என்றுதான் நமது நிறுவனர் முன்வருகிறார்/ முன்நிற்கிறார். நம்முன் உள்ளவற்றுள், சாதாரணமான (Casual/ Ordinary), வழமையான (Customary), சீர்மிகு (Smart) என்பதான அம்சங்கள் உள்ளன. எனவே, எந்த பொருளும், எந்த செயலும், எந்த நிகழ்வும் மேற்கண்ட மூன்று அலகுகளில்/ தரத்தில் ஏதாவதொன்றாக தொடர்ந்து நிகழ்ந்துகொண்டும் மாறிக்கொண்டுதான் இருக்கின்றன. நமது அமைப்பிலுள்ள நம் போன்றவர்கள்தான், நம் முன்னுள்ள, நிகற்கின்ற அனைத்தையும் உயர்நிலையான தரமுள்ளதாக, சீர்மிக்கதாக ஆக்க முயல்கின்றோம். அதற்கான திறன்மிக்க தலைமைத்துவப் பண்பு (Able/ Skillful Leadership Quality) நமக்கும் அவசியமாகிறது. அதற்கான உயர்திறன் பயிற்சியும் அத்தியாவசியமானது. இதுதான் தலைமையின், அமைப்பின் வளர்த்தெடுத்தல் பற்றிய கூர்நோக்கு.

நாம் நமது வாழ்வின் இறுதிநாள் வரை கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்க, நம்மில் பலர் அனைத்தையும் கற்றுவிட்டதாகக் கருதுகிறோம். மேலும், தனித்துவம் நிறைந்த நமது அமைப்பின் மதிநுட்பம் நிறைந்த இலக்குகளை – 5 பரிமாணங்களை அடைவதற்கு புதுமையும் புத்தாக்கமும் கொண்ட நவீன பயிற்சி யும் அதை நமது நிறுவனரோ  அல்லது நமது அமைப்பைச் சேர்ந்த முன்னோடிகளோ நடத்துவதே அவசியமும் சாலச் சிறந்ததும் ஆகும். பயிற்சியின் விளைவு, சிறந்த பேச்சு வடிவம் என்பதோடு மட்டுமின்றி நமது இலக்கை நோக்கிய உள்ளடக்கத்தையும் வழங்கியே ஆகவேண்டும். இதை வெளியிலிருந்து வரும் தலைசிறந்த பேச்சாற்றல் பயிற்சியாளரால் வழங்க முடியாது. விஞ்ஞானமோ, ஒவ்வொன்றும் இணைந்து இயங்கி, வளர்சிதை மாற்றத்தாலேயே வளர்ச்சி அடைகிறது என்கிறது.

அதனாலேயே நமது அமைப்பும் ஆளுமை வளருமே ஆன்ம பலத்தால்; அகிலம் உய்யுமே அத்திறத்தால் என்கிறது. இந்த மாற்றத்தையும் மேம்பாட்டையும் செய்யவே திறன் பயிற்சிகள்!

நம் ஒவ்வொருவருக்கும் நம் திறமைக்கேற்ப கிடைக்கும் வெவ்வேறு மேடைபோலன்றி, 1234 அறக்கட்டளை என்பது உயர்வான, தனித்துவமான அரங்கு என்பதை அனைவரும் அறிந்தால், தனித்திறன் மேம்பாடுகள் அர்த்தமுள்ளதாகும்!

10 – அமைப்பாக்கம் (Organising Skill) அப்படியொன்றும் நம்மனைவருக்கும் அத்துப்படியானதல்ல என்பதை ஆரம்பத்திலேயே வலியுறுத்தினோம். ஏனென்றால், அது நமது வாழ்வின் கல்வி – கேள்வி, எங்குமே எப்போதும் கற்றுக் கொடுக்கப்படவில்லை. அமைப்பாக்கம் (Organising), ஒழுங்கமைப்பு (Structuring), வளர்த்தெடுத்தல் (Nurturing and Developing), இயக்கமாக்கல் (Mobilising) எல்லாமே உயரிய நெறிகளையும் ( Higher Degree of Ideals) அர்ப்பணிப்புமிக்க செயல்களையும் (Devotional Duties) முன்கோருகின்றன (Pre-requisite) என்பதையும் கண்ணுற்றோம். அப்படியானால், இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைப்பபது எங்ஙனம்? ஆம், இங்குதான் ஆத்ம வலிமை/ தவ வலிமை (Spiritual Power) தேவைப்படுகிறது. இது ஆத்ம மாற்றம் என்ற வெறும் சொல்வலிமை மட்டுமல்ல; அது மகத்தான செயல் வலிமை ஆகும். அதனால்தான் வள்ளுவன் சொன்னான்: “செயற்கரிய செய்வார் பெரியார் – சிறியார் செயற்கரிய செய்கலாதார்”. ‘செயற்கரிய’ எனும்போதே அது வழக்கமான (Customary), பழகிப்போன (Routine) ஒன்றல்ல என்பது தெளிவு. அது, புதிய ‘அச்சு’ (Pattern) செய்து ‘வார்ப்பது’ (Mould) போன்றது; பல்வேறு அனுபவங்களையும் (Expertise) திறமைகளையும் (Skill) ஒருங்கிணைப்பது. ஒற்றை மனிதனைப்போன்ற ஒரே சிந்தனையோடு நம் வலிமை அனைத்தையும் ஒன்றுதிரட்டி சிந்தாமல் சிதறாமல் ஒரே இலக்கை நோக்கிச் செலுத்துவது; தகர்த்து முன்னேறுவது; புதிய புதிய தளங்களில் நமது தடங்களைப் பதிப்பது. இப்படியாகத்தான், புதிய புதிய தொடர் நிகழ்வுகளை நமது அடிப்படை கொள்கை (Ideals), கோட்பாடுகள் (Doctrines) மற்றும் நெறிமுறைகள் ((Morale) தவறாமல் சாதித்தாக வேண்டும். இப்படியான தொடர் நிகழ்வுகளே இயக்கமாகும் (Movement).

ஒற்றை மனிதன் போன்ற சிந்தனைமுறையை எப்படி நிறுவமுடியும்? இதற்குத்தான், இடைவிடாத தொடர் கருத்தாக்கத் தொடர்புகளும் ஆளுமைமிக்க சீரிய வழிகாட்டுதலும் அவசியமாகிறது. நாளங்களும் நாடி நரம்புகளும் ரத்தத்தையும் சக்தியையும் உணர்ச்சிகளையும் பரிமாறுவது போல, இடைவிடாத தொடர் கருத்தாக்கத் தொடர்புகளையும் அனுபவங்களையும் ஆற்றலையும் இத்த விஞ்ஞான யுகத்தில் மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும் பகுதி பதியாக சேகரித்து ஒன்று திரட்டாவிட்டால் வேறெந்த சூழலிலும் சாத்தியமில்லை. அதுபோலவே, செயலூக்கம் என்பதும் கீழிருந்து மேலாகவும் மேலிருந்து கீழாகவும் குறுக்கும் நெடுக்காகவும் பகுதி பகுதியாக செலுத்தப்பட்டு ஒன்றுதிரட்டப்பட வேண்டும். இதற்கான பணிகளும் தொடர்புகளும் ஒன்றுவிட்டு ஒன்று (Scattered and Shattered) என்பதாக இல்லாமல் ஒன்றோடொன்று தொடர்பு (Dialectical Relation) கொண்டதாக , காலத்திலும் (Time) இடத்திலும் (Space) அமையப்பெற வேண்டும். அதாவது, நமது தொடக்ககால நிகழ்முறைகள், அமைப்பு வடிவங்கள், தொடர்புகள், ஒருகிணைப்புகள் அனைத்துமே படிப்படியான வளர்ச்சியின் கூறுகளாக ஆழத்திலும் அகலத்திலும் வளர்த்தெடுக்கப்பட வேண்டுமேயன்றி  எதுவும் ஒதுக்கித் தள்ளப்பட்டதாகவோ தொடர்பற்றதாகவோ ஆகிவிடக்கூடாது. ஆம், நமது வளர்ச்சியின் வேர்கள் இந்த பூமிக்குள் – தமிழத்தில் ஊடுருவுவது போல நமது அமைப்பின் வேர்களும் கடந்தகால அமைப்புமுறைக்குள்ளும் செயல்களுக்குள்ளும் ஊடுருவியும் கால்பதித்துமே வந்தாக வேண்டும். எனவே, கடந்தகால நிகழ்வுகளையும் செயலூக்கத்தையும் கூர்ந்து கவனித்து அவற்றின் விழுமியங்களையே புதிய பரிமாணத்தில் வளர்த்துச் சென்றாக வேண்டும்!

கொரோனா பெருந்தொற்று காலத்திலும் எண்ணற்ற செயல்களையும் பணிதொடர்களையும் செயலூக்கத்தோடு எப்படி நிறைவேற்றினோம்?! அருப்பாக, மொட்டாக இருந்த காலமன்றோ அது! அப்போதே அப்படியென்றால், இப்போது எப்படி இருக்க வேண்டும்? 20 மாதங்களுக்கு மேலான அனுபவமும் முதிர்ச்சியும் இன்று நம்மிடம் உண்டல்லவா! அப்படியானால், நமது நெருக்கமும் வேகமும் விவேகமும் அதிகப்படவே வேண்டும். இப்போதும் தடுமாற்றம் ஏதும் உண்டென்றால், ஆழமான பரிசீலனைக்கு நாம் அனைவருமே உடனடியாக உட்பட்டே ஆகவேண்டும். நோய்நாடி நோய் முதல்நாடி அது தணிக்கும் வாய்நாடி ஏற்புடைய செயல் கண்டாக வேண்டும்.

11-ஓர் சமூக இயக்கம் (Social Movement) அதன் இலக்கை அடைவதற்கு எண்ணற்றோரின் பொறுப்பேற்பையும் (Responsibility) பங்கேற்பையும் (Participation) முதலில் கோருகிறது. பின்போ, பொறுப்பு வகிப்பதையும் (Liable) பங்களிப்பதையும் (Deliver) கோருகிறது. நாம் முன்பே கூறியது போல அர்ப்பணிப்புமிக்க ஈடுபாடென்பது (Dedication) இந்த பொறுப்பு வகித்தலிலும் பங்களித்தலிலும் இருந்துதான் தொடங்குகிறது. நாம் விட்டுச் செல்லும் தடம் என்பது சேற்றில்/ மணலில் பதித்ததாக இல்லாமல் பாறையில் செதுக்கியதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த அர்ப்பணிப்பு மிக்க ஈடுபாடும், பொறுப்பும், பங்கும் தேவை  ஆகும். இவை விருப்பத்தைக் (Desire) கடந்த உறுதி (Will Power) என்பதாகும். இதற்கான வேறுபாட்டைக் காண்பது அவசியம்.

சேவைகள் பலவிதம் என்பதை நாம் அறிவோம். ஒருவர், இரந்து கேட்போருக்கு சில்லரைகளை இடுகிறார். மற்றொருவர், பசித்தோர்க்கு அன்னம் இடுகிறார், ஒருவர், பார்வையற்றோர்க்கு பாதையைக் கடக்க உதவுகிறார். இன்னொருவர், குளிரில் நடுங்குவோருக்கு போர்வையை வழங்குகிறார். வேறொருவர், படிப்போர்க்கு கல்விக் கட்டணம் செலுத்துகிறார். மற்றவர், வீடிழந்தோர்க்கு வீடுகட்டிக் கொடுக்கிறார். சிலர், வாழும்போது குருதி தானமும் மறைவிற்குப் பின் கண் தானமும் உறுப்பு தானமும் வழங்குகிறார். இவையெல்லாம் அவரவரின் விருப்பத்தின் (Desire) பேரில்தான் நடக்கின்றன; எந்தவிதக் கட்டாயமும் இல்லை. ஆனால், இந்த சேவைகளின் வாழ்நாள்/ நினைவுகள் எவ்வளவு காலத்திற்கு?! பொன்மனச் செம்மலாய் எம். ஜி. ராமச்சந்திரன் அவர்கள் நீண்ட நாட்களாக எவ்வளவோ உதவிகள் செய்தார், கொடுத்து சிவந்த கரமென்றுகூட பெயரெடுத்தார். அப்போது அவர் ஏற்ற பாத்திரங்கள் மக்கள் திலகமாகவும் புரட்சி நடிகராகவும் கட்சியின் பொருளாளராகவும் பிரச்சாரகராகவும் மட்டுமே  இருந்தது. ஒரு தரப்பால் மட்டுமே போற்றிப் பாராட்டப்பட்டது. அதே எம். ஜி. ஆர்., புரட்சித் தலைவராக இயக்கம்/ கட்சி கண்டு, தமிழக முதல்வராக தனது இறுதிக் காலம்வரை இருந்து ஆற்றிய பணிகள் ஆண்டாண்டு காலமாய் அனைவராலும் பேசப்படுகிறது, பாராட்டப்படுகிறது; எதிர்தரப்பு என்ற ஒன்றுகூட இன்று அவருக்கில்லை. மருத்துவமனையில் படுத்துக்கொண்டுகூட அவரால் ஜெயிக்க முடிந்தது. ஏனென்றால், அவர் தனிமனிதராகவோ அல்லது ஒரு கட்சிக்கானவராகவோ மட்டுமிருந்து சேவை செய்யவில்லை. மாபெரும் இயக்கத்திற்கு சொந்தக்காரராகவும் தமிழகத்தின் முதல்வராகவும் அவர் ஆற்றிய சேவைக்கான வாழ்நாள் நீண்டுகொண்டே போகிறது. இங்கு அவரது விருப்பத்தையெல்லாம் கடந்து உறுதிமிக்க (Will Power) அர்ப்பணிப்பும் (Dedication) பொறுப்பும் (Dutifulness) பங்களிப்புமே (Service) அவரது சேவைகளை சேற்றில் பதித்த தடமாக கரைந்து போகாமல் கல்லில் வடித்த பாதையாக ஆக்கியுள்ளது. தனிமனித விருப்பங்களால், பத்தோடு பதினொன்றாக கட்டுண்ட அமைப்புமுறைக்குள்ளாக நமது 1234 அறக்கட்டளைக்குள்ளாக யாருமே இல்லை. அவரவர் தன் ஆற்றலுக்கு உட்பட்டு அவரவர் முன் முயற்சிகளைக் கட்டவிழ்த்துவிட எந்தத் தடையும் தடங்களும் இங்கில்லை – வானமே இங்கு எல்லை. கருத்து முதல் செயல்வரை சுதந்திரத்திற்கு இங்கு கட்டுகளே இல்லை. இங்கு, நமது அமைப்பின் மூலம் தடம் பதிக்காமல், பெயரெடுக்காமல் வேறு எங்குபோய் பெயர் சொல்லப் போகிறோம்.

12-இந்த அமைப்பும் அதன் இயக்கமும் வரலாற்று (Historical) வழிபட்டதால் (முன்பே நாம் பார்த்ததுதான்) இதைக் காலம் கொண்டுபோய்விடப் போவதில்லை; காலத்தால் அழிந்துவிடாமல் ஆக்கத்தான் முடியும். அப்படியானால், நமது பெயர்களும் அமைப்பு உள்ளவரை – காலா காலத்திற்குப் பேசத்தானே படும்! பிறகென்ன தயக்கமும் தேக்கமும்.

 

“வெற்றி கொடி கட்டு

     பகைவரை முட்டும் வரை முட்டு

      லட்சியம் எட்டும் வரை எட்டு

        படையெடு படையப்பா!

 

கைதட்டும் உளிபட்டு

          நீ விடும் நெற்றித்துளி பட்டு

          பாறைகள் ரெட்டை பிளவுற்று

            உடைபடும் படையப்பா!

 

கைதட்டும் உளிபட்டு

          நீ விடும் நெற்றித்துளி பட்டு

      பாறைகள் ரெட்டை          பிளவுற்று

          உடைபடும் படையப்பா!

 

வெட்டுக்கிளி அல்ல

    நீ ஒரு வெட்டும் புலி என்று

      பகைவரை      வெட்டித்தலைகொண்டு

        நடையெடு படையப்பா

 

வெட்டுக்கிளி அல்ல

         நீ ஒரு வெட்டும் புலி என்று

          பகைவரை  வெட்டித்தலைகொண்டு

      நடையெடு படையப்பா

 

மிக்கத் துணிவுண்டு

     இளைஞர்கள் பக்கத்  துணையுண்டு

      உடன்வர மக்கட்படையுண்டு

       முடிவெடு படையப்பா!”மிகுந்த வரவேற்பைப்பெற்ற கடந்த 10 மற்றும் 11-ஆம் பதிவுகளில் நாம் காண முயன்ற அம்சங்களை (Factors)  மீண்டும் நினைவு கூர்வது அவசியமாகிறது.

1)                    நமது வேர்களை நமது சொந்த மரபிலிருந்து – கடந்த 20 மாத அனுபவங்களிலிருந்து – வளர்த்து வலுவாக்க வேண்டும்.

2)                    உயரிய சித்தாந்த நெறிகளை (Superlative Ideals) ஆதாரமாகக் கொண்ட அர்ப்பணிப்புமிக்க (Dedicated) செயல் தொடர்களே (Activities) நமது வளர்ச்சியின் உத்வேகமும் ஊக்கமும்.

3)                    ஆத்ம மாற்றம் என்பது வெற்று முழக்கத்தால் அல்ல உத்வேகமும் அர்ப்பணிப்பும் மிக்க கூட்டுச் செயலால் (Team Work) ஆகும்.

4)                    இயக்கம் என்பது எண்ணற்றோரின் ஆத்மார்த்த பங்களிப்பால் ஊக்கம் பெறுவது.

5)                    நமது 1234 இயக்கத்தின் அமைப்புமுறையும் செயல் ஆர்வமும் வரலாற்று வழிபட்ட வகையில் எல்லையற்ற முன்முயற்சிகளையும் ஆக்கபூர்வமான கருத்தாக்கங்களையும் கட்டவிழ்த்து விடுவதற்கான விரிவான வாய்புகளை வழங்குகின்றன.

6)                    மேற்கண்ட எல்லாவற்றிற்கும் பொதுவாக, நமது அமைப்பும் (Organisation) செயல்பாடும் (Function) ஒற்றை மனிதனை  ஒத்த அமைப்பையும் (A Single Headed Human Anatomy) அதன் எல்லா அங்கங்களையும் நெருக்கமாகவும் (Close) இருக்கமாகவும் (Tight) இணக்கமாகவும் (Synchronized) செயலூக்கமாகவும் ( Dynamics) இயங்கத்தக்க (Dilectical Functioning) இரத்தமும் தசையும் (As Blood and Flesh) மனமும் ஆன பிணைப்பை நாளங்களும் நாடிகளும் நரம்புகளும் (Veins, Pulse and Nerves) ஆக ஆன மானுட உடலமைப்பும் (Human Structure) இயற்கையின் ஆகச்சிறந்த படைப்பான மூளையும் சிந்தனையுமான (Brain and Thought) வழிகாட்டி (Guiding) நெறிபடுத்தும் (Steering) பொறியமைவும் (Mechanism) தக்க காலத்திலும் (Time) இடத்திலும் (Space) பொருத்தமாக நிறுவப்படுவதன் (Situate) அவசியம். (அதன் ஆரம்பக் கூறுகள் ஏற்கனவே அரும்பிவிட்டன).

7)                    இறுதியாக, அமைப்பு என்பது ஒற்றை மனிதனை ஒத்தாக இருப்பினும் உள்ளார்ந்த விசை என்பது எண்ணற்றோர் பங்களிப்பு ஆயினும் அதன் உள்ளார்ந்த அங்கம் (Minute Unit) தனிமனிதன் என்பதும் அவனுக்கான உந்து சக்தி விருப்பம் கடந்த உறுதியான உள்ளக் கிடக்கை (Strong Will Power) என்பதும்.

இவ்வளவுமா சொன்னோம் என்ற ஆச்சரியமும் புருவம் உயர்த்துதலும் தெளிவாகவே தெரிகிறது. ஆம், இவ்வளவையும் தான் மீண்டும் மீண்டும் வெவ்வேறு கோணங்களிலும் அளவுகளிலும் விவரணங்களோடு சொல்லி வருகிறோம். இவ்வளவுமே நமது அமைப்பு பற்றியும் அதன் செயல்கள் பற்றியும் அதன் தேவைகள் பற்றியும் அதன் நிலை பற்றியும்தான்.

             ………….தொடரும்………